Enable Javscript for better performance
துணைநிலை ஆளுநரிடம் நேரம் கேட்டு முதல்வர் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    சீலிங் நடவடிக்கை பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசனை நடத்த செவ்வாய்க்கிழமை வருவதாக பாஜக தலைவர்கள் முதல்வர் கேஜரிவாலுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அனைவரும் சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் ஒதுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநருக்கு முதல்வர் கேஜரிவால் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
    அந்த கடிதத்தில் கேஜரிவால் கூறியுள்ளதாவது:
    தில்லியில் நடைபெற்று வரும் சீலிங் நடவடிக்கை வணிகர்களுக்கு மிகப் பெரிய சிரமத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உங்களுக்கு (துணைநிலை ஆளுநர்) ஏற்கெனவே கடிதம் எழுதி சிலவற்றை நினைவூட்டிருந்தேன். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதை உடனடியாக அமல்படுத்தியிருந்தால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுத்திருக்க முடியும். முதலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அதைத் தொடர்ந்து சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி), தற்போது சீலிங் நடவடிக்கை போன்றவற்றால் சிறு, குறு வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து நீங்கள்தான் (துணைநிலை ஆளுநர்) வணிகர்களைக் காப்பாற்ற முடியும்.
    எவ்வித தாமதமும் இன்றி தீர்வு கண்டு, தில்லி வணிகர்களைக் காப்பாற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக தில்லி பாஜக தலைவர்கள் என்னை சந்திக்க செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வருகின்றனர்.
    இந்த விவகாரம் துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு கீழ் வருவதால், என் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வரும் பாஜக எம்எல்ஏ, எம்பிக்களும், ஆம் ஆத்மி எம்எல்ஏ எம்பிக்களும், மாநகராட்சி கவுன்சிலர்களும் உங்களை இல்லத்தில் செவ்வாய்க்கிழமை 9.30 மணியளவில் சந்திக்கும் வகையில் நேரம் ஒதுக்க வேண்டும்' என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai