Enable Javscript for better performance
பனிமூட்டத்தால் 35 ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் திங்கள்கிழமை காலை அடர் பனி மூட்டம் நிலவியது. தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ் பதிவானது. பனிமூட்டம் காரணமாக, பல பகுதிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு வரக்கூடிய 35 ரயில்கள் தாமதமாகின. 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
    தில்லியில் தற்போது பனியின் தாக்கம் காலை வேளைகளில் அதிகமாக காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலை அதிகாலையில் குறைவாக உள்ளது. பகல்நேரத்தில் வெப்ப நிலையில் ஏற்றமும் இருந்து வருகிறது.
    ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
    திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனின் சராசரியை விட 2 புள்ளிகள் குறைந்து 7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது.
    மேலும், லோதி சாலையில் 6.7 டிகிரி செல்சியஸும், பாலம் வானிலை ஆய்வு மையத்தில் 6.7 டிகிரி செல்சியஸும், ஆயாநகர் மையத்தில் 8.4 டிகிரி செல்சியஸும், ரிட்ஜ் பகுதியில் 8.6
    டிகிரி செல்சியஸும் பதிவாகியிருந்தது.
    காலை 8.30 மணியளவில் காண்புதிறன் 300 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. காற்றில் 97 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
    பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி நிலவரப்படி தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் 35 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்ததாகவும், 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 5 ரயில்களின் புறப்பாடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாகவும் ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai