Enable Javscript for better performance
வடக்கு, தெற்கு மாநகராட்சிகளில் தொடரும் சீலீங் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு, தெற்கு மாநகராட்சிகளில் தொடரும் சீலீங் நடவடிக்கை

    By DIN  |   Published on : 30th January 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமையும் சீலிங் நடவடிக்கை தொடர்ந்தது.
    தில்லியில் நடைபெற்றுவரும் சீலிங் நடவடிக்கையை 6 மாதங்களுக்கு ஒத்தி வைப்பது தொடர்பாக தில்லி மாநகராட்சிகள் சனிக்கிழமை ஆராய்ந்தபோதும், திங்கள்கிழமையும் வடக்கு, தெற்கு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீலிங் நடவடிக்கை தொடர்ந்தது.
    சீலிங் நடவடிக்கை தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட ஹட்சன் லைன், ஒட்ராம் லைன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 கடைகள் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகளால் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டன.
    இக்கடைகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கட்டப்பட்டவை என்றனர்.
    தெற்கு தில்லி மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் 40 வணிகச் சொத்துக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
    இது தொடர்பாக தெற்கு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு மண்டலங்களில் உள்ள 40 வணிகச் சொத்துக்களுக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டன. இவற்றில் வங்கிகள், உணவு நிலையங்கள், மன்றங்கள், மதுபானக் கூடங்கள் அடங்கும். இந்த வணிக வளாகங்கள் சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டவை' என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai