Enable Javscript for better performance
அடர் பனி மூட்டம்: 22 ரயில்கள் ரத்து, காற்றின் தரம் "மோசம்'- Dinamani

சுடச்சுட

    

    அடர் பனி மூட்டம்: 22 ரயில்கள் ரத்து, காற்றின் தரம் "மோசம்'

    By DIN  |   Published on : 31st January 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை அடர் பனி மூட்டம் நிலவியது. பின்னர் பகலில் வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. பனிமூட்டம் காரணமாக, பல பகுதிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு வரக்கூடிய 37 ரயில்கள் தாமதமாகின. 22 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
    தில்லியில் தற்போது பனியின் தாக்கம் சில தினங்களாக சற்று குறையத் தொடங்கியது. குறைந்தபட்ச வெப்பநிலைக்கும் அதிகபட்ச வெப்பநிலைக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. எனினும், காலை வேளையில் பனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. 
    ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரியாக இருந்தது. திங்கள்கிழமை இந்த சீசனின் சராசரியை விட 2 புள்ளிகள் குறைந்து 7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 9.8 டிகிரியாக உயர்ந்தது. 
    காலை 8.30 மணியளவில் சப்தர்ஜங் பகுதியில் காண்புதிறன் 800 மீட்டராக இருந்தது. காற்றில் 75 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி நிலவரப்படி தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் 37 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்ததாகவும், 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 7 ரயில்களின் புறப்பாடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாகவும் வடக்கு ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
    காற்றின் தரம் "மோசம்': தில்லியில் காற்றின் தரம் 290 மதிப்பீடு புள்ளிகளுடன் "மோசமான' பிரிவில் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது. லோதி ரோடு பகுதியில் காற்றின் தரத்தைப் பொருத்தமட்டில் காற்றில் நுண்துகள் பி.எம். 2.5 அளவு 211 மதிப்பீடு புள்ளிகளாகவும், நுண்துகள் பி.எம். 10 அளவு 213 மதிப்பீடு புள்ளிகளாகவும் இருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai