Enable Javscript for better performance
ஆரஞ்சு நிற கடவுச்சீட்டுகள் வழங்கப்படாது: வெளியுறவு அமைச்சகம் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    ஆரஞ்சு நிற கடவுச்சீட்டுகள் வழங்கப்படாது: வெளியுறவு அமைச்சகம் தகவல்

    By DIN  |   Published on : 31st January 2018 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியேற்றச் சோதனை அவசியம் என்ற வகையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் கடவுச்சீட்டுகளை (பாஸ்போர்ட்) வழங்குவது என்ற தனது முடிவைக் கைவிடுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    கடவுச்சீட்டுகள் தற்போது நீல நிறத்தில் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. குடியேற்றச் சோதனை அவசியம் (இசிஆர்) என்ற பிரிவில் இடம்பெறுபவர்களுக்கு ஆரஞ்சு நிறத்தில் கடவுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்குவது என்று வெளியுறவு அமைச்சகம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. அதேபோல் கடவுச்சீட்டின் கடைசிப் பக்கத்தில் மனுதாரரின் தனிப்பட்ட தகவல்களை அச்சிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அத்துறையின் இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் அதிகாரிகள் பேங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், ஆரஞ்சு நிறத்தில் கடவுச்சீட்டுகளை அச்சிடும் முடிவையும், கடவுச்சீட்டின் கடைசிப் பக்கத்தில் தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் முடிவையும் கைவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
    இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "வெளியுறவு அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய 3 நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகளின் கடைசிப் பக்கத்தில் தனிப்பட்ட தகவல்களை அச்சிடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. 
    அதேபோல், பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து, தற்போது உள்ள கடவுச்சீட்டுகள் தவிர தனியாக ஆரஞ்சு நிற கடவுச்சீட்டுகளை வெளியிடுவது என்ற முடிவு  கைவிடப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai