Enable Javscript for better performance
எட்டு மாத குழந்தை பலாத்காரம்: 28 வயது  உறவினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் எட்டு மாத குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் உடல் பாதிப்புக்குள்ளான அக்குழந்தைக்கு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குழந்தையின் உறவினரான 28 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    வடமேற்கு தில்லி, நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதி கூலித் தொழிலாளர்கள். சம்பவத்தன்று வீட்டிலிருந்து இருவரும் வேலைக்குச் சென்றனர். அப்போது, தங்களது 8 மாத பெண் குழந்தையை அருகில் இருந்த உறவினர் வீட்டில் விட்டுச் சென்றனர். 
    இந்நிலையில், வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டு நண்பகலில் தனது வீட்டுக்குத் திரும்பிய குழந்தையின் தாய், உறவினர் வீட்டுக்கு குழந்தையை அழைத்து வரச் சென்றார். அப்போது, குழந்தையின் ஆடையில் ரத்தக் கறை படிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனது கணவரிடம் விவரத்தை அப்பெண் கூறினார். பின்னர் விசாரணையில், வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த உறவினரின் மகன் குழந்தையை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 
    இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மிகவும் உடல் பாதித்திருந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தை நலமுடன் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். 
    மேலும், குழந்தையின் உறவினர் சுபாஷ் (28) கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தான் குடிபோதையில் இருந்த நிலையில், குழந்தையை பலாத்காரம் செய்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்தாக போலீஸார் கூறினர்.


    மிகவும் துயரம் அளிக்கிறது
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட குழந்தையை தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் திங்கள்கிழமை நேரில் சென்று பார்த்தார். பின்னர் இதுகுறித்து அவர் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "குழந்தை பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் துயரம் அளிக்கக் கூடியதாக உள்ளது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் தொடர்புடைய வழக்கில் 6 மாதத்தில் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை' என்று அதில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai