Enable Javscript for better performance
சீலிங் நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    சீலிங் நடவடிக்கைக்கு எதிராக தெற்கு, வடக்கு தில்லி மாநகராட்சிகளின் தலைமை அலுவலகமான சிவிக் சென்டர் அருகில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர்.
    இந்த போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே தலைமை வகித்து பேசுகையில், "தில்லியில் வாகன நிறுத்த கட்டணம் என்ற பெயரில் மோசடி நடைபெற்று வருகிறது. 
    வாகன நிறுத்த மையங்கள் மேம்படவில்லை. இதுபோன்ற உருமாற்றக் கட்டணம் பெயரிலும் மோசடி நடைபெற்று வருகிறது. 
    வசூலிக்கப்படும் உருமாற்றக் கட்டணம் சந்தைகளின் மேம்பாட்டுக்கு செலவிடாமல், பிற திட்டங்களுக்கு தில்லி மாநகராட்சிகள் ஒதுக்கி வருகின்றன. சீலிங் நடவடிக்கையால் கடுமையாக வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    மத்திய அரசையும், தில்லி மாநகராட்சிகளையும் ஆட்சி செய்து வரும் பாஜக நினைத்திருந்தால் சீலிங் நடவடிக்கைக்கு தீர்வு காண முடியும். 
    வணிகர்களின் நலன் குறித்து பாஜகவுக்கு அக்கறை இல்லை. சீலிங் நடவடிக்கைக்கு எதிராக கிழக்கு தில்லி மாநகராட்சி தலைமை அலுலகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்' என்றார் திலீப் பாண்டே. 
    இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர்கள், கட்சியின் மாநகராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai