Enable Javscript for better performance
தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள்அறிமுகம்: மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட்- Dinamani

சுடச்சுட

    

    தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள்அறிமுகம்: மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட்

    By DIN  |   Published on : 31st January 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுவதாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் செவ்வாய்கிழமை கூறினார்.
    இந்து ஞானி சிரோமணி குரு ரவிதாஸின் 641-ஆவது நினைவு தினம் தில்லி பாஜக அலுவலகத்தில் செவ்வாய்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக தாழ்த்தப்பட்டோர் பிரிவின் தலைவர் மோகன் லால் கேகரா, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிரோமணி குரு ரவிதாஸின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் தவார் சந்த் கெலாட் பேசியதாவது:
    பஞ்சாப்பில் தாழ்த்தப்பட்டோர் குலத்தில் பிறந்த ரவிதாஸ், பக்தி மார்க்கத்தில் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். அவரை நினைவுகூர வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இதய சுத்தியாக பாஜகவினர் போராடுகின்றனர் என்றார். 
    இந்நிகழ்வில் தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி பேசுகையில்,"இந்திய மக்களுக்காக வாழ்ந்து மடிந்து போன ஞானிகளின் நினைவு தினங்கள் இதேபோல அனுசரிக்கப்பட வேண்டும்' என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai