Enable Javscript for better performance
வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் கடைளுக்கு தொடர்ந்து "சீல்'- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் கடைளுக்கு தொடர்ந்து "சீல்'

    By DIN  |   Published on : 31st January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு செவ்வாய்கிழமையும் சீலிங் நடவடிக்கை தொடர்ந்தது. 
    இது தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வடக்கு தில்லி மாநகராட்சிகளுக்கு உள்பட்ட கரோல் பாக், ரோகிணி, சிவில் லைன் ஆகிய பகுதிகளில் உள்ள 37 கடைகளுக்கு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகளால் செவ்வாய்கிழமை சீல் வைக்கப்பட்டன. இக்கடைகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கட்டப்பட்டவை என்றனர். 
    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட ரஜௌரி கார்டன், பஞ்சாபி பாக், ஹரி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 14 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்கிழமை சீல் வைத்தனர். இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ரஜௌரி கார்டன், பஞ்சாபி பாக், ஹரி நகர் ஆகிய பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பான வகையில் கட்டப்பட்ட சொத்துகளுக்கும், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai