Enable Javscript for better performance
ஹஜ் யாத்திரைக்கு 5 முறை விண்ணப்பித்தவர்கள் யார்-யார்? மத்திய அரசு தகவல் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஹஜ் யாத்திரைக்கு 5 முறை விண்ணப்பித்தவர்கள் யார்-யார்? மத்திய அரசு தகவல் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 31st January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹஜ் யாத்திரைக்கு 5 முறை விண்ணப்பித்தும் அதற்கு அனுமதி கிடைக்கப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டு நடைமுறையை நெறிப்படுத்துமாறு கோரி கேரள ஹஜ் கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
    இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில் "இந்த விவகாரத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் அரசியல்சாசனத்தின் 14ஆவது பிரிவு மீறப்பட்டுள்ளது என்பதை மனுதாரரால் சுட்டிக்காட்ட முடியவில்லை' என்றார்.
    அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஹஜ் யாத்திரைக்கு 5 முறை விண்ணப்பித்தும் அதற்கு அனுமதி கிடைக்கப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai