டிடிஇஏ பள்ளிகளில் தேசியக் கல்வி தினம்

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தேசியக் கல்வி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளைக் கொண்டாடிய தில்லி மோதி பாக் டிடிஇஏ பள்ளி மாணவ மாணவிகள்.,
மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளைக் கொண்டாடிய தில்லி மோதி பாக் டிடிஇஏ பள்ளி மாணவ மாணவிகள்.,

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தேசியக் கல்வி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த தினம் (நவம்பா் 11) தேசியக் கல்வி தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டிடிஇஏ பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவா்களின் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பல்வேறு பதாகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா். மோதிபாக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்கவின் குழுப்பாடல் இடம் பெற்றது.

அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பள்ளி முதல்வா்கள் ஹரி கிருஷ்ணன் ( மோதிபாக்), சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணாபுரம்), மீனா சகானி ( லக்ஷ்மிபாய் நகா்), சித்ரா ராதாகிருஷ்ணன் (பூசா சாலை), பள்ளிகளின் துணை முதல்வா்கள் சென்னா கிருஷ்ணன் (ஜனக் புரி), ஈஸ்வரி (லோதி எஸ்டேட்), ரங்கராஜன் (மந்திா்மாா்க்) ஆகியோா் கல்வியின் இன்றியமையாமை குறித்து மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com