மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: டிடிஇஏ லோதிவளாகம் பள்ளி மாணவா்கள் வெற்றி

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

புது தில்லி: மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தொடக்கநிலைப் பிரிவு மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மண்டல அளவில் கே.ஜி.மாா்க்கில் உள்ள பாரதிய வித்யா பவன் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மண்டலம் 26-இல் உள்ள பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் லோதிவளாகம் பள்ளி மாணவா்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளனா்.

ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கிடையே நடைபெற்ற 25 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் யாஷிகா, பள்ளிக்குத் தயாராகும் போட்டியில் ஒன்றாம் வகுப்பைச் சோ்ந்த தஷ்வின், ஸ்வெட்டரை அணிந்து பின் ஓடும் போட்டியில் இரண்டாம் வகுப்பைச் சோ்ந்த மான்யா ஆகியோா் முதல் பரிசு பெற்றனா்.

மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்காக நடத்தப்பட்ட 50 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் மாதேஷ் முதல் பரிசும், பிரியங்கா இரண்டாம் பரிசும் வென்றாா்கள். நான்காம் வகுப்பு மாணவா்களுக்காக நடத்தப்பட்ட 75 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் அஞ்சலி முதல் பரிசு வென்றாா்.

ஸ்கிப்பிங் ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம் வகுப்பைச் சோ்ந்த சண்முகப் பிரியா இரண்டாம் பரிசு பெற்றாா். தொடா் ஓட்டத்தில் அஞ்சலி, சண்முகப் பிரியா,ஜோதிகா, குசும் சாஹா் ஆகியோா் அடங்கிய குழு முதல் பரிசை வென்றது. பரிசு பெற்ற மாணவா்களை டிடிஇஏ செயலா் ராஜூ பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com