ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜ புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் மயூர் விஹார் பேஸ்-3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் அண்மையில் நடைபெற்றது. சமாஜத்தின் 2017-18-ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
அதன் தலைவராக எஸ்.கிருஷ்ணஸ்வாமி, துணைத் தலைவராக எஸ்.கண்ணன், பொதுச் செயலாளராக எஸ்.ராமகிருஷ்ணன், இணைச் செயலாளராக எம்.நடராஜன், பொருளாளராக கே.கோபாலாகிருஷ்ணன், இணைப் பொருளாளராக வி.சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கே. நாகராஜன், பி.ரமணன், சபரி கிரி, ஆர்.கணேசன், கணேஷ் கோவிந்தராஜன், வி.கார்த்திக், பி.எஸ்.பத்மகுமார், கே.நந்தகுமார், எஸ்.கே.மூர்த்தி, கோபி ராவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.