Enable Javscript for better performance
கேஜரிவாலுக்கு 4 முதல்வர்கள் ஆதரவு : துணைநிலை ஆளுநருக்கு கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    கேஜரிவாலுக்கு 4 முதல்வர்கள் ஆதரவு : துணைநிலை ஆளுநருக்கு கடிதம்

    By DIN  |   Published on : 16th June 2018 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    இந்த விவகாரம் தொடர்பாக, துணைநிலை ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ள அவர்கள், அதற்காக நேரம் ஒதுக்கும்படி அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
    தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் தில்லி வந்துள்ளனர். தில்லிக்கு சனிக்கிழமை  வந்த மம்தா பானர்ஜி (மேற்குவங்கம்) , குமாரசாமி  (கர்நாடகம்),  சந்திரபாபு நாயுடு (ஆந்திரம்),  பினராயி விஜயன் (கேரளம்) உள்ளிட்ட 4  மாநிலங்களின் முதல்வர்கள் ஆந்திர பவனில் சந்தித்து கேஜரிவாலின் உள்ளிருப்புப் போராட்டம் தொடர்பாக விவாதித்தனர்.
    பிறகு, துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க அவர்கள் முடிவு செய்தனர்.
    இதுதொடர்பாக  4 மாநில முதல்வர்களும் கையெழுத்திட்டு எழுதிய கடிதத்தில், "முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் போராட்டம் தொடர்புடைய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக, உங்களை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நீங்கள் எங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.
    மறுப்பு: இதனிடையே முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க மம்தா பானர்ஜிக்கு துணைநிலை ஆளுநர் அலுவலகம் மறுப்பு தெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
    இதுதொடர்பாக கேஜரிவால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'இந்த முடிவை  துணைநிலை ஆளுநர் சுயமாக எடுத்திருக்க முடியாது.  ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தம், பிரதமர் அலுவலகத்தின் உத்தரவுப்படி நடப்பதுபோல, இந்த விவகாரத்திலும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவையே துணைநிலை ஆளுநர் பின்பற்றுகிறார்'  என்று தெரிவித்துள்ளார்.
    இதனிடையே, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்துக்கு சென்ற 4 முதல்வர்களும், அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai