Enable Javscript for better performance
தொடர்ந்து 5-ஆவது நாளாக கடுமையான காற்று மாசு! நீர்த் தெளிப்பு நடவடிக்கை: மாநகராட்சிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    தொடர்ந்து 5-ஆவது நாளாக கடுமையான காற்று மாசு! நீர்த் தெளிப்பு நடவடிக்கை: மாநகராட்சிகள் தீவிரம்

    By DIN  |   Published on : 16th June 2018 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் தூசி மாசுவின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு மூன்று மாநகராட்சிகள் சார்பிலும் சாலைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் நீர்த் தெளித்தல் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    இது குறித்து மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறுகையில், "காற்றில் தூசி கலப்பதைத் தடுக்கும் வகையில் 60 தண்ணீர் டேங்கர் லாரிகள் நீர்த் தெளிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வடக்கு தில்லி மாநகராட்சியில் 142 தண்ணீர் டேங்கர் லாரிகள் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட  6 மண்டலங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    இதேபோல், கட்டுமான இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக 83 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, விதிமீறியதாக 38 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.  விதி மீறலில் ஈடுபட்டுள்ளோர் மீது மொத்தம் ரூ. 20.75 லட்சம்  அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.
    காற்றில் தூசி மாசுவின் அளவைக் வைக் கருத்தில் கொண்டு கிழக்கு தில்லி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  
    நீர்த் தெளிப்புடன்கூடிய  சாலைத் தூய்மைப் பணியும் இயந்திரம் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாலையோரங்களில்  தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூசி கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    இந்நடவடிக்கைக்காக 123 டிராக்டர்கள், டிராலிகள்,  டேங்கர்கள், 407 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார் அந்த அதிகாரி.
    கிழக்கு தில்லி மாநகராட்சியைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறுகையில், "தூசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள விதிகளை மீறியதற்காக கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 177 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  12 கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 326 இடங்களில் கட்டுமான செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai