Enable Javscript for better performance
லாரி மோதி பல்கலை. மாணவி பலி- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி தனியார் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.
    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    தில்லியிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கட்டடக் கலை படிப்பில் 5-ஆம் ஆண்டு பயின்று வந்தவர் குஷ்பு சர்மா (22). திரி நகர் பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் கல்விசார் பயிற்சியும் மேற்கொண்டு வந்த அவர், கடந்த வியாழக்கிழமை இரவு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவதற்காக தனது தாய் அஞ்சு சர்மாவை (43)  அழைத்துள்ளார். இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் சென்ற அஞ்சு, தனது மகளை ஏற்றிக் கொண்டு, மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
    கேசவ்புரம் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அஞ்சு வலது புறமும், குஷ்பு இடது புறமும் கீழே விழுந்தனர். இதனால் பதற்றமடைந்த லாரியின் ஓட்டுநர், அங்கிருந்து தப்பிப்பதற்காக லாரியை வேகமாக இயக்கியுள்ளார். இதில் குஷ்பு மீது லாரி ஏறி இறங்கியுள்ளது. அக்கம்பக்கம் இருந்தவர்கள், சிறிது தூரத்தில் லாரியை மடக்கி, ஓட்டுநரை பிடித்தனர்.
    இதனிடையே, காயமடைந்த தாயும் மகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் குஷ்பு ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.  விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் பெயர் சோட்டி குமார் என்பதும், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் ஏற்கெனவே 4 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு, அபராத நடவடிக்கைக்கு ஆளானவர் என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அந்த அதிகாரி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai