Enable Javscript for better performance
அல்கா லம்பாவுக்கு எதிரான வழக்கு: உத்தரவு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடையை சூறையாடியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
    இந்த வழக்கு தொடர்பாக தில்லி போலீஸ், அல்கா லம்பா தரப்பிலான வாதங்கள் வெள்ளிக்கிழமை முடிவடைந்ததையடுத்து மேற்கண்ட உத்தரவை நீதிபதி அபிலாஷ் மல்ஹோத்ரா பிறப்பித்தார்.
    கடந்த 2015, ஆகஸ்ட் 9ஆம் தேதி, தில்லி கஷ்மீரி கேட் பகுதியில் போதைப்பொருள்களுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
    இதையடுத்து, அங்கிருந்த இனிப்புக்கடைக்குள் அல்கா லம்பா புகுந்த சூறையாடியதாக இனிப்புக்கடைக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில், கஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    இந்தச் சம்பவத்தின்போது தில்லி போலீஸாரையும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி போலீஸார் சிசிடிவி கேமரா பதிவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
    அதில், அல்கா லம்பா அவரது ஆதரவாளர்கள் இனிப்பு கடையின் மேஜையில் உள்ள பொருள்களை தள்ளிவிடுவது பதிவாகி இருந்தது. அல்கா லம்பா தாக்கப்பட்டது இந்த சிசிடிவி பதிவில் இல்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai