Enable Javscript for better performance
இரவு நேர தங்கும் கூடாரங்களை அகற்ற முடிவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இரவு நேர தங்கும் கூடாரங்களை அகற்றுவதற்கு தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) முடிவு செய்துள்ளது.
    இது குறித்து வாரியத்தின் உயர் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: வீடற்றோர் குளிர்காலத்தில் இரவு நேரங்களில் தங்குவதற்கு வசதியாக வாரியத்தின் சார்பில் எய்ம்ஸ் சுரங்கப் பாதை உள்ளிட்ட 67 பகுதிகளில் தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    இந்நிலையில், இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தாற்காலிக கூடாரங்களை அகற்ற வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்து கூடாரங்களையும் அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai