Enable Javscript for better performance
தலித் வன்கொடுமைச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்- Dinamani

சுடச்சுட

    

    தலித் வன்கொடுமைச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு: மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th March 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்த கடுமையான விதிமுறைகளைத் தளர்த்தி உச்ச நீதிமன்றம கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
    இச்சட்டத்தின்கீழ் பொய் வழக்குகளைப் பதிவு செய்து அச்சுறுத்தப்படும் நிலையில் இருந்து நேர்மையான அரசு ஊழியர்களைக் காக்கும் நோக்கில் உடனடிக் கைது என்ற ஷரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    அதன்படி இச்சட்டத்தின்கீழ் ஓர் அரசு ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டால் அவரது உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி அவரைக் கைது செய்ய முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பீரோ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
    நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக நீதிக்கும், நீதிக்கும் எதிரான சக்திகள் அனைத்தும் தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் துணிச்சலைப் பெற்றுவிடும்.
    எனவே, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
    நீதிமன்றத் தீர்ப்பானது, தலித்துகள் நாள்தோறும் சந்தித்து வரும் ஜாயை ரீதியிலான ஒடுக்குமுறை மற்றும் கொடுமைகளை அலட்சியப்படுத்தியுள்ளது.
    வன்கொடுமை செய்வோருக்கு முன்ஜாமீன் அளிப்பதற்கான கட்டுப்பாடுகளை அகற்றியுள்ளது மற்றும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்பே அரசு ஊழியர்களைக் கைது செய்ய முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது ஆகியவை குற்றம் இழைத்தவர்களைக் கைது செய்வதற்கு சாத்தியமே இல்லை என்ற நிலையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    முன்னதாக, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போக செய்துள்ளதற்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வானும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai