Enable Javscript for better performance
பேரவையில் பாஜக உறுப்பினரின் இடைநீக்க உத்தரவு வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பாஜக உறுப்பினர் ஓ.பி. சர்மாவை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
    தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 6-ஆவது நாள் அலுவல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் தொகுதிகளின் முக்கிய பிரச்னைகளை முன் வைத்தனர். இதனிடையே, ஆம் ஆத்மி உறுப்பினர் ஜீத்தேந்தர் சிங் தோமர் கொண்டு வந்த பாஜக உறுப்பினர் ஓ.பி. சர்மாவின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறும் முன்மொழிவு, குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் அறிவித்தார்.
    முன்னதாக, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு பேசிய ஆம் ஆத்மி உறுப்பினர் ஜிதேந்தர் சிங் தோமர், 'இன்றைய நாள் சிறப்பானதாக உள்ளதால், ஓ.பி. சர்மாவின் தகுதி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும்' என்றார்.
    கேள்வி நேரத்தில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுகையில், '20 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் மக்களாட்சி தொடர்புடைய பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சத்தியத்தின், நியாயத்தின் வெற்றியாக உள்ளது' என்றார்.
    தகாத வார்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி தில்லி சட்டப்பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர் ஓ.பி. சர்மாவை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai