Enable Javscript for better performance
லோக்பால் அமைக்கக் கோரி காலவரையின்றி உண்ணாவிரதம் : ஹசாரே தொடங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    லோக்பால் அமைக்கக் கோரி காலவரையின்றி உண்ணாவிரதம் : ஹசாரே தொடங்கினார்

    By DIN  |   Published on : 24th March 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான லோக்பால் அமைப்பை உருவாக்க வலியுறுத்தி சமூக சேவகர் அண்ணா ஹசாரே தில்லியில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவர் ஏற்கெனவே ஊழல் ஒழிப்பை வலியுறுத்தி கடந்த 2011-இல் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தினார். அவரது இயக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அந்தப் போராட்டசம் நடைபெற்றது. இது அப்போது மத்தியில் ஆட்சி புரிந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை உலுக்கியது.
    இந்நிலையில், லோக்பால் அமைப்பை உருவாக்க வலியுறுத்தி ஹசாரே தில்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினார். இம்முறை அவர் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசைக் குறிவைத்து விமர்சனங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக மத்தியில் லோக்பால் அமைப்பு, மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்புகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றும் வேளாண் துறை பிரச்னைகளுக்குத் தீர்வு காண எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் ஹசாரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai