Enable Javscript for better performance
ஆம் ஆத்மி எம்எல்ஏ பதவி விலகக் கோரி பாஜக பேரணி- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக புகாருக்கு உள்ளான ஆம் ஆத்மி எம்எல்ஏ நாராயண் தத் சர்மா பதவி விலகக் கோரி தில்லி பாஜகவின் மகளிர் பிரிவினர் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர். பதர்பூரில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
    பதர்பூர் எம்எல்ஏயும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான நாராயண் தத் சர்மா தில்லி அரசில் பணியாற்றும் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது. அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பாஜகவின் தில்லி மகளிர் பிரிவினர் பதர்பூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர். இதையொட்டி, அவர்கள் விஜயேந்தர் சாகித் நினைவிடத்தில் இருந்து எம்எல்ஏ நாராயண் தத் சர்மாவின் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    ஆர்ப்பாட்டத்தில் தில்லி பாஜகவின் மகளிர் பிரிவின் தில்லி தலைவர் பூனம் பராஷர் பங்கேற்று பேசியதாவது: பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள். மேலும், பெண்களுக்கு எதிரானது ஆம் ஆத்மி கட்சி . அக்கட்சித் தலைவர்கள் பெண்களிடம் தவறாக நடக்க முற்பட்டதற்கு பல சான்றுகள் உள்ளன. தில்லி பெண்கள், ஆம் ஆத்மி கட்சி மீது கடுங் கோபத்தில் உள்ளனர். அது அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும்' என்றார்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ரம்பீர் சிங் பிதூரி, தெற்கு தில்லி மாவட்ட பாஜக தலைவர் ரோக்தாஷ் பிதூரி, இணைப் பொறுப்பாளர் சத்ய நாராயண் கௌதம், கவுன்சிலர்கள் பிரிந்தேரி ஆவானா, அனாமிகா சிங், அனிதா சிங்கால், கே.கே.சுக்லா, மகேஷ் லோகிகா, பாஜாக மகளிர் அணி மாவட்டத் தலைவர்கள் மாயா பிஸ்ட், கீதா குலாட்டி, சரிதா தோமர், ரேணு செளத்ரி, சஷி வர்மா, பூர்ணிமா பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai