Enable Javscript for better performance
ஏர் இந்தியா தனியார்மயத்துக்கு சிஐடியு கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது.
    இது குறித்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீதப் பங்குகளை விற்பனை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தனியார்மயத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் அடைந்து வருவதாக பொய்யான காரணம் காட்டப்படுகிறது. ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுவதற்கும், கடன் அதிகரித்ததற்கும் நிர்வாகத்தின் தோல்வியோ, விவேகமற்ற செயலோ காரணமாகக் கூற முடியாது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அடுத்தடுத்து அதிக அளவில் விமானங்கள் வாங்கப்பட்டதும், திட்டமிடப்படாத இரு நிறுவனங்களின் இணைப்பும்தான் காரணங்களாகும். இதுபோன்ற சூழலிலும், ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்துடன் இயங்கி வந்துள்ளது.
    ஆனால், பிற தனியார் விமான நிறுவனங்களைப் போல ஏர் இந்தியா நிறுவனம் வங்கிகளை ஏமாற்றவில்லை. இதுபோன்ற சூழலில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முடிவு, தேச நலன்களில் சமரசம் செய்து கொண்டு, வெளிநாட்டு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலன் ஏற்படும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
    ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படுவது தேச நலனைப் பாதிக்கும். மத்திய அரசின் இந்த முடிவு தேச நலனுக்கு எதிராகவே அமையும் என்றார் தபன்சென்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai