Enable Javscript for better performance
கோடையை சமாளிக்க டிஜேபியிடம் முறையான திட்டம் இல்லை: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    கோடையை சமாளிக்க டிஜேபியிடம் முறையான திட்டம் இல்லை: பாஜக

    By DIN  |   Published on : 31st March 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடையை சமாளிக்க தில்லி ஜல் போர்டிடம் (டிஜேபி) முறையான செயல்திட்டம் இல்லை. இதனால், தில்லியில் உள்ள குடிசைப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என பாஜகவின் தில்லி பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா தெரிவித்தார்.
    இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
    தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி ஜல் போர்டிடம் கோடையைச் சமாளிக்கக் கூடிய வகையிலான எவ்வித செயல்திட்டங்களும் இல்லை. கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. ராஜேந்திர நகர், பட்டேல் நகர், மோதி நகர் ஆகிய இடங்களில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்தர்புரி, மோதி நகர் ஆகிய சிறிய காலனிகளில் நாளொன்றுக்கு அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நரைனா, தோடாப்பூர், ஷாதிப்பூர், கம்பூர் ஆகிய தில்லி புறநகர் பகுதியில் உள்ள அங்கீகாரம் உள்ள குடியிருப்புக் காலனிகள் பாதிக்கப்படும். மேலும் காஸ் கோதம், பிரேம் நகர், காயத்ரி காலனி, குல்ஷான் செளக் ஆகிய மீள் குடியேற்றக் காலனிகளும் பாதிக்கப்படும். 
    மேலும், கோடையைச் சமாளிக்கும் வகையில் குடிநீர் லாரிகளை அதிகளவில் இயக்கவும் ஜல் போர்டு ஏற்பாடு செய்யவில்லை. தில்லி ஜல் போர்ட்டின் இந்த மெத்தனப் போக்கால் தில்லி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai