Enable Javscript for better performance
சீலிங் நடவடிக்கைக்கு எதிரான உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தார் கேஜரிவால்- Dinamani

சுடச்சுட

    

    சீலிங் நடவடிக்கைக்கு எதிரான உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தார் கேஜரிவால்

    By DIN  |   Published on : 31st March 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீலிங் நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்த  உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.
    இதுகுறித்து அக்கட்சியின் தில்லி தலைமை செய்தித்தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை கூறுகையில், "சீலிங் நடவடிக்கை விவகாரம்  தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காக இரு மூத்த வழக்குரைஞர்களை தில்லி அரசு நியமித்துள்ளது.  இதுபோன்ற நிலையில், ஏற்கெனவே அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றால், அது நீதிமன்றத்தின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும்;  மேலும், வழக்கு விசாரணயையும் பாதிக்கும் என வழக்குரைஞர்களும், வணிகர்களும் முதல்வருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.  இதனால், உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டனர். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முடிவு செய்துள்ளார். எனினும், சீலிங் நடவடிக்கையை தில்லி ஆம் ஆத்மி கட்சி உண்ணிப்பாக கவனிக்கும்' என்று தெரிவித்தார்.
    சிஏஐடி கேள்வி: முன்னதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே அறிவித்தபடி உண்ணாவிரதம் இருப்பாரா? என்று அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் (சிஏஐடி) பொதுச் செயலாளர் பிரவீண் கண்டெல்வால் கேள்வி எழுப்பியிருந்தார்.
    இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மார்ச் 31-ஆம் தேதிக்குள் சீலிங் நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தில்லி முதல்வர் கேஜரிவால் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதுவரை சீலிங் நடவடிக்கை நிறுத்தப்படவில்லை. இதுபோன்ற சூழலில் தில்லி முதல்வரின் உண்ணாவிரதப் போராட்டம் நடக்குமா என்பது குறித்த வணிகர்களுக்கு பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியும், தில்லி அரசும் கணத்த மெளனம் கடைப்பிடித்து வருகிறது.  
    எனவே, சீலிங் நடவடிக்கைக்கு எதிராக தில்லி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பாரா என்பது குறித்தும் விளக்கம் வேண்டும்.  அப்படி உண்ணாவிரதம் இருப்பதென்றால், சீலிங் நடவடிக்கையைத் தடுக்கும்  வகையில் மசோதாவை தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும். 
    மேலும், 351 சாலைகளை வணிகம் சார்ந்ததாக அறிவித்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு  மூத்த வழக்குரைஞரை தில்லி அரசு நியமிக்க வேண்டும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai