Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கோபுரங்கள்: அனுமதி வழங்க என்டிஎம்சி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி கோபுரங்கள்: அனுமதி வழங்க என்டிஎம்சி திட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) சொந்தமான கட்டடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட 6 மண்டலங்களில் சமூக அரங்குகள், மூத்த குடிமக்கள் மனமகிழ் மன்றம், விளையாட்டு வளாகங்கள், மகிளா ஹாட், மண்டல அலுவலகங்கள் உள்பட மாநகராட்சிக்குச் சொந்தமான 800 கட்டடங்களில் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தங்களது கோபுரங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.44 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வடக்கு தில்லி மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறை நிலவுகிறது. மாநகராட்சி ஊழியர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. என்டிஎம்சிக்கு சொந்தமான கட்டடங்களில் செல்லிடப்பேசி நிறுவனங்கள் டவர்களை அமைக்க அனுமதி வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் நிதியை பிரத்யேகமாக மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப் பயன்படுத்தவுள்ளோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai