Enable Javscript for better performance
தில்லி அரசின் ஆன்மிக பயண திட்டத்துக்கு எதிர்ப்பு:  துணைநிலை ஆளுநர் மீது அமைச்சர் கைலாஷ் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி அரசின் ஆன்மிக பயண திட்டத்துக்கு எதிர்ப்பு:  துணைநிலை ஆளுநர் மீது அமைச்சர் கைலாஷ் புகார்

    By DIN  |   Published on : 31st March 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முதியோர்களுக்கான இலவச ஆன்மிக பயணத் திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தில்லி வருவாய்த் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அமைச்சர் தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை செய்துள்ள பதிவில், "தில்லியில் வாழும் முதியோர்கள் ஆன்மிக பயணம் செல்வதற்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட "டீர்த் யாத்ரா' திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கட்டுப்பாடு விதித்துள்ளார். வயதான பெற்றோர்கள் யாத்திரை செல்ல அவர்களது பிள்ளைகள் நிதி உதவி அளிப்பதில்லை என்பதை துணைநிலை ஆளுநர் மறந்துள்ளார். அரசின் திட்டங்கள் அனைத்தும் வறுமை கேட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக மட்டும் செயல்படுத்த முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் டுவிட்டரில் செய்துள்ள பதிவில், "தில்லி அரசின் எந்தஒரு திட்டங்களையும் துணைநிலை ஆளுநர் எதிர்த்து வருகிறார். இது வருந்தமளிக்கிறது. இந்த சூழ்நிலையில் எப்படி அரசை நடத்துவது? தில்லி அரசின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என்று பாஜகவை கேட்டுக் கொள்கிறேன். பிற மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகள், தில்லி அரசுக்கு ஈடாக செயல்பட முடியுமா? என சவால் விடுகிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
    தில்லி அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், முதியோர்கள் இலவசமாக ஆன்மிக பயணம் செல்ல ரூ. 53 கோடி ஒதுக்கப்படுவதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 77,000 முதியோர்கள் பயனடைவார்கள் என்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார். எனினும், இந்தத் திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், அவர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai