Enable Javscript for better performance
தில்லி ரயிலில் கத்தி முனையில் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்த பயணிகளிடம் 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 
    இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நிதின் சௌதரி வெள்ளிக்கிழமை கூறுகையில், "நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் அம்பாலாவுக்கு விரைவு ரயில் அதிகாலை 3.56 மணிக்கு புறப்பட்டது. அந்த ரயில் திலக் மேம்பாலம் அருகே சிறிது நேரம் நின்றது. அப்போது, பொதுப் பெட்டியில் உள்ள பயணிகளிடம் 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசிகள், பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர். 
    இதில் சுமார் 12 முதல் 15 பேரிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புது தில்லி ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினரும், மாநில அரசு காவல் துறையினரும் சேர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai