Enable Javscript for better performance
விதவைகளின் நலவாழ்வு தொடர்பான தகவல்களை சில மாநில அரசுகள் வழங்காதது துரதிருஷ்டவசமானது: உச்ச நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    விதவைகளின் நலவாழ்வு தொடர்பான தகவல்களை சில மாநில அரசுகள் வழங்காதது துரதிருஷ்டவசமானது: உச்ச நீதிமன்றம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விதவைகளின் நலவாழ்வு தொடர்பான தகவல்களை சில மாநில அரசுகள் வழங்காதது துரதிருஷ்டவசமானது  என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    உத்தரப் பிரதேசத்தின் விருந்தாவன் பகுதியில் உள்ள நலவாழ்வு மையங்களில் தங்கியிருக்கும் விதவைகள் மற்றும் நிராதரவான பெண்களின் நிலையைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. விதவைகள் மற்றும் நிராதரவான பெண்களின் நலவாழ்வை உறுதிப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 
    அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், விதவைகள் மற்றும் நிராதரவான பெண்களின் நலவாழ்வுக்கான செயல்திட்டத்தை உருவாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெற்ற பிரமாணப் பத்திரத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதிகள் எம்.பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை பரிசீலித்துப் பார்த்ததில், விதவைகளின் நலவாழ்வு தொடர்பான தகவல்களை சில மாநில அரசுகள் வழங்கவில்லை என்பது தெரிய வருகிறது. 
    மேலும் சில மாநில அரசுகள் வழங்கியுள்ள தகவல்கள் முழுமையற்றவையாக உள்ளன. இது துரதிருஷ்டவசமானது. 
    விதவைகள் மற்றும் நிராதரவான பெண்களின் நலவாழ்வுக்காக அமல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள் தொடர்பான தகவல்களை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேசிய மகளிர் ஆணையத்துக்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
    அவ்வாறு தகவல்களைத் திரட்டி, அவற்றை அலசி ஆராய்வதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உதவிபுரிய வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
    அதைத் தொடர்ந்து, அவர்கள் இவ்வழக்கு விசாரணையை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai