Enable Javscript for better performance
கால்வாயில் மூழ்கிய 2 கல்லூரி மாணவர்கள்: தேடும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    கால்வாயில் மூழ்கிய 2 கல்லூரி மாணவர்கள்: தேடும் பணி தீவிரம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் கால்வாயில் மூழ்கிய பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் வியாழக்கிழமை காலை தில்லி பவானாவில் உள்ள கால்வாயின் கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது, அவர்களில் ஒருவர் தவறி கால்வாயில் விழுந்தார். 
    அவரை மீட்க மற்றொரு மாணவர் தண்ணீரில் குதித்தார். இதையடுத்து, இருவரும் நீரில் மூழ்கினர். இது தொடர்பாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இரு மாணவர்களையும் மீட்க சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai