Enable Javscript for better performance
நீர் பற்றாக்குறை ஏற்படக் கூடும்: ஹரியாணா முதல்வர், தில்லி ஆளுநருக்கு கேஜரிவால் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    நீர் பற்றாக்குறை ஏற்படக் கூடும்: ஹரியாணா முதல்வர், தில்லி ஆளுநருக்கு கேஜரிவால் கடிதம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் நீர் பற்றாக்குறை பிரச்னை ஏற்படாமல் இருக்க தற்போது வழங்கப்பட்டு வரும் நீரின் அளவை குறைக்காமல் இருக்க வேண்டும் என்று ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டருக்கும், தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.
    மே 21ஆம் தேதி வரை தில்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஹரியாணா அரசு புதன்கிழமை உறுதி அளித்திருந்தநிலையில், இந்தக் கடிதங்களை முதல்வர் அனுப்பியுள்ளார். 
    அனில் பய்ஜாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மே 21ஆம் தேதிக்கு பிறகு தில்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டால் தில்லியில் நீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், பல்வேறு நாடுகளின் தூதரங்கள் உள்பட தில்லியில் விவிஐபிக்கள் தங்கியுள்ள பகுதிகளில் நீர் தட்டுப்பாடு ஏற்படும்.
    ஆகையால், இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரிடம் கொண்டு சென்று ஹரியாணா அரசு தடையின்றி நீரை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுகொண்டுள்ளார்.
    ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் தில்லிக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோடை மாதங்களான மே, ஜூனில் நீர் தேவை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கிறது. 
    தில்லிக்கு அளிக்க வேண்டிய நீரின் அளவு குறைந்தால் தில்லியில் நீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆகையால், தில்லிக்கு தேவையான நீரை தடையின்றி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai