Enable Javscript for better performance
6 மாதங்களில் 1,000 அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    6 மாதங்களில் 1,000 அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகரில் 6 மாதங்களில் 1,000 அரசுப் பள்ளிகளில் 1.46 லட்சம் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தில்லி பொதுப் பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
    இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தில்லியில் உள்ள 1,028 அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களில் 1,46,800 சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.597.51 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக் கழிப்பறைகள் நீங்கலாக திறந்தவெளிப் பகுதியிலும், வகுப்பறைகளிலும் இக்கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். 
    கேமராக்கள் பொருத்துவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இற்கான ஏல நடைமுறையில் எட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சிசிடிவியில் பதிவாகும் காட்சிகள் பள்ளியில் சேமிக்கப்பட்டு, 30 நாள்களுக்குப் பிறகு தானாகவே அழிக்கப்பட்டுவிடும். 
    இந்த விடியோ பதிவு காட்சிகளைப் பார்வையிடுவதற்காக பெற்றோர்களுக்கு அடையாள பெயரும், ரகசிய குறியீடும் வழங்கப்படும். 
    திட்டத்திற்கான ரூ.597.51 கோடியில் ரூ.385.85 கோடி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், ரூ.57.69 கோடி கேமராக்களைப் பராமரிப்பதற்கும், ரூ.153.97 கோடி பள்ளிகளுக்கான இணையதள இணைப்புக்காகவும் செலவிடப்படும். இந்தத் திட்டத்திற்கான அனுமதியை தில்லி அரசின் செலவின நிதிக் குழு அளித்துள்ளது என்றார் சத்யேந்தர் ஜெயின்.
    தில்லி அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, தில்லியில் நகர் முழுவதும் 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக மறுபுறம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 
    இந்த விவகாரம் தொடர்பாக தில்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai