வடமேற்கு தில்லி கலாசார சங்கம் சார்பில் செப். 15-இல் விநாயகர் சதுர்த்தி விழா

தில்லி ரோஹிணியில் உள்ள வடமேற்கு தில்லி கலாசார சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தில்லி ரோஹிணியில் உள்ள வடமேற்கு தில்லி கலாசார சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, அன்றைய தினம் காலை 11 மணியளவில் மூர்த்தி பிரதிஷ்டையும், ஸ்ரீ விநாயகர் ஊர்வலமும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் பஜனை, ஈஷா சர்மாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இரவு 9 மணிக்கு மஹா தீபாராதனையும் அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும். செப்டம்பர் 22-ஆம் தேதி விநாயகர் விசர்ஜனம் நடைபெறவுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரோஹிணி கணபதி பூங்காவில் செப்டம்பர் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலும் தினமும் மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலும் ஸ்ரீகிருஷ்ணா என்ற தலைப்பில் ஆசார்ய ராகுல் கிருஷ்ணன் மஹாராஜின் உபன்யாசம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வடமேற்கு தில்லி கலாசார சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com