காற்று மாசைக் கண்காணிக்க 30 குழுக்கள்

தில்லியில் குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிய என்சிஆர் பகுதிகளில் 30 குழுக்களை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மாசு கட்டுபாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. தில

தில்லியில் குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிய என்சிஆர் பகுதிகளில் 30 குழுக்களை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மாசு கட்டுபாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசு உச்சத்தை தொடுகிறது. இந்த ஆண்டு இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதைத் தடுக்கவும், காற்று மாசுக்கான காரணங்களைக் கண்டறியவும் இந்த 30 குழுக்கள் அமைக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்சிஆர் பகுதிகளில் இந்த 30 குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் அந்தக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசு தொடர்பாக சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com