டிடிஇஏ பள்ளிகளில் ஹிந்தி தின விழா

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் ஹிந்தி தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.


தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் ஹிந்தி தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1949, செப்டம்பர் 14-ஆம் தேதி ஹிந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல் ஆண்டு தோறும்அன்றைய தினம் ஹிந்தி தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. டிடிஇஏ செயலர் ஆர்.ராஜுவின் அறிவுறுத்தலின் பேரில், டிடிஇஏ பள்ளிகளில் ஹிந்தி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் உரை இடம் பெற்றது. மாணவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தி ஹிந்தி மொழியின் சிறப்பை எடுத்துரைத்தனர்.
ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் மாணவர் உரையைத் தொடர்ந்து, நடனம், நாடகம், நடுநிலைப் பிரிவு மாணவர்களின் குழுப்பாடல் மற்றும் கவிதை ஆகியன இடம் பெற்றன. பள்ளி முதல்வர் சித்ரா வாசகம், துணை முதல்வர் தங்கவேலு ஆகியோர் ஹிந்தி மொழியின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும், அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள் ஹரிகிருஷ்ணன் (மோதிபாக்), காயத்ரி (மந்திர் மார்க்), உமா ரவி (லோதி வளாகம்), மீனா சஹானி (லக்ஷ்மிபாய் நகர்) ரஞ்சன் குப்தா (முதல்வர் பொறுப்பு-ஜனக்புரி), சித்ரா ராதாகிருஷ்ணன் (முதல்வர் பொறுப்பு-பூசா சாலை) ஆகியோர் ஹிந்தி தினத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com