தற்காலிக ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படாது'

தெற்கு தில்லி மாநகராட்சியின் (எஸ்டிஎம்சி) தற்காலிக ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படமாட்டாது என அம் மாநகராட்சி உறுதியளித்துள்ளது.


" தெற்கு தில்லி மாநகராட்சியின் (எஸ்டிஎம்சி) தற்காலிக ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படமாட்டாது என அம் மாநகராட்சி உறுதியளித்துள்ளது.
எஸ்டிஎம்சியில் உள்ள பல்வேறு துறைகளில் சுமார் 10,000 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் சுமார் 10-20 சதவீதத்தைக் குறைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவல்களை எஸ்டிஎம்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிஎம்சி நிலைக்குழுத் தலைவர் ஷிக்கா ராய் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
எஸ்டிஎம்சியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் ஊதியத்தை மாநகராட்சி குறைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை. தற்போது, திறனறிவற்ற தற்காலிக ஊழியர்கள் ஊதியமாக ரூ.13,584, பகுதியளவு திறனுடைய தற்காலிக ஊழியர்கள் ரூ. 14,698, திறனறிவுள்ள ஊழியர்கள் ரூ.16,468 ஊதியமாகப் பெற்று வருகின்றனர். இந்த ஊதியம் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும். தற்காலிக ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com