அடிப்படை மூலக்கூறு மருந்துகளின் பெயர்களை மருத்துவர்கள் தெளிவாக எழுதக் கோரி மனு

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் (அடிப்படை மூலக்கூறு மருந்துகளின் (ஜெனரிக் ) பெயர்களை மருந்துச் சீட்டில்

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் (அடிப்படை மூலக்கூறு மருந்துகளின் (ஜெனரிக் ) பெயர்களை மருந்துச் சீட்டில் தெளிவாக எழுதித் தருவதை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அமித் ஷனி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய மருத்துவக் கவுன்சில் 2017-இல், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கீழ் பதிவுபெற்றுள்ள அனைத்து மருத்துவர்களும் அடிப்படை மூலக் கூறு மருந்துகளின் பெயர்களை பயன்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இது தொடர்பாக மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் பல்வேறு அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள் அனுப்பிய போதிலும், பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஒளஷதி பரியோஜனா (பிஎம்பிஜேபி) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட பிறகும் ஜெனரிக் மருந்துகளை தெளிவாக எழுதச் செய்வதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வெறும் சுற்றறிக்கைகள் வெளியிடுவதுடன் மட்டுமே தங்களது கடைமையை முடித்துக் கொண்டு விடுகின்றனர். 2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிஎம்பிஜேபி திட்டத்தின் கீழ் அடிப்படை மூலக்கூறு மருந்துகள் அனைத்தும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கச் செய்ய வேண்டியிருந்தது. ஆகவே, இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனைகள் அருகே அடிப்படை மூலக்கூறு மருந்துகள் விற்பனைக் கடைகளை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com