52 துப்பாக்கிகளுடன் இருவர் கைது: தில்லி போலீஸ் அதிரடி

தில்லி ரோஹிணியில் 52 துப்பாக்கிகளுடன்  2 பேரை  போலீஸார் கைது செய்தனர். 

தில்லி ரோஹிணியில் 52 துப்பாக்கிகளுடன்  2 பேரை  போலீஸார் கைது செய்தனர். இது குறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: 
தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் சட்டவிரோத ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வரும் கும்பலைப் பிடிக்க  நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்தியப் பிரதேசம் கர்காவ்ன், தார், பர்ஹன்பூர்,  பிகாரில் உள்ள முங்கர் ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோத ஆயுதங்களை வாங்கி தில்லியில் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு கும்பல்கள் பிடிபட்டன. 
இந்நிலையில் சட்டவிரோத ஆயுதம் தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட  மத்தியப் பிரதேசம், பத்வனி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த அமாரிகன் (25),  ஷீத்தல் சிங் (22) ஆகியோர் ரோஹிணி செக்டார் 15 பகுதியில் உள்ள அலோக் குந்த் பேருந்து நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 52 சட்டவிரோத துப்பாக்கிகள்,  கார்,  செல்லிடப்பேசிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக,  இருவரும் அலோக் குந்த் பேருந்து நிலையத்திற்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆயுதம் விநியோகம் செய்ய வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இருவரும் விரட்டிப் பிடித்து கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக  ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்ததாக காவல் உயர் அதிகாரி சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com