அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹார்வர்டு பல்கலை. குழு பயிற்சி
By DIN | Published On : 04th April 2019 06:06 AM | Last Updated : 04th April 2019 06:06 AM | அ+அ அ- |

தில்லியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக குழுவினர் பயிற்சி அளித்து வருவதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அத்துடன் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.
அதில், துவாரகா செக்டார் 10-இல் உள்ள ஆர்பிவிவி மாணவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், "தில்லி அரசுப் பள்ளியில் இருந்து மேலும் ஒரு புகைப்படம். ஹார்வர்டு பல்கலைக்கழகக் குழு மூலம் ரோபோட் உருவாக்குவதற்கு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
வரும் மக்களவை தேர்தலில் துடைப்பம் சின்னத்துக்கு வாக்களித்து தேச நிர்ணமாத்தின் இந்த
முன்மாதிரியை பலமாக்குங்கள். எந்தக் கட்சி நல்ல கல்வியை அளிக்க முடியாதோ அதைவிட பெரிய தேசவிரோதி யாரும் இருக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மணீஷ் சிசோடியாவின் இந்த சுட்டுரைப் பதிவை தில்லி முதல்வர் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்துள்ளார்.