ரோஹிணி, நொய்டாவில் பஞ்சாங்க படணம் நிகழ்வு

ரோஹிணியில் உள்ள வடமேற்கு கலாசார கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வருடப் பிறப்பின் ஒரு பகுதியாக விஹாரி வருட பஞ்சாங்க படணம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

ரோஹிணியில் உள்ள வடமேற்கு கலாசார கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வருடப் பிறப்பின் ஒரு பகுதியாக விஹாரி வருட பஞ்சாங்க படணம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சி ரோஹிணி செக்டார் 2, பாக்கெட் 7-இல் உள்ள காளி கோயிலில் நடத்தப்பட்டது. இதையொட்டி, அனைத்து மக்களின் நன்மைக்காக பூஜை நடத்தப்பட்டது. 
இந்தப் பூஜையை சுவாமிநாத சாஸ்திரிகள் நடத்தினார். 
மேலும், புதுவருட பலன்களையும் அவர் எடுத்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து, ரங்கநாத சாஸ்திரிகள் பஞ்சாங்கம் படிப்பதன் பலன்கள் மற்றும் புத்தாண்டில் ராசிகள், கிரகங்கள் மாறுதல்களையும், அதன் பலாபலன்களையும் எடுத்துரைத்தார். 
இந்நிகழ்ச்சியில் ரோஹிணிவாழ் தமிழர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 
நொய்டாவில்...: இதே போன்று  தமிழ் புத்தாண்டையொட்டி, நொய்டா செக்டார் 62- இல் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கார்த்திகேயா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஹாரி வருட பஞ்சாங்க படணம் நிகழ்வு நடைபெற்றது. பஞ்சாங்க பலன்கள் குறித்து ஸ்ரீராம் எடுத்துரைத்தார். இந்நிகழ்வையொட்டி ஸ்ரீவிநாயகா, ஸ்ரீ கார்த்திகேயா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com