Enable Javscript for better performance
சிஆர்பிஎஃப் வீரராக நாடகமாடியவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சிஆர்பிஎஃப் வீரராக நாடகமாடியவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கைது

    By DIN  |   Published On : 29th April 2019 06:51 AM  |   Last Updated : 29th April 2019 06:51 AM  |  அ+அ அ-  |  

    மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வீரர் போல நாடகமாடிய இளைஞரை தில்லி சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) கைது செய்தனர். 
    இதுகுறித்து மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது: 
    தில்லி சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
    அப்போது, மத்திய ரிசர்வ் காவல் படையின் உடையில் இருந்த  இளைஞரின் நடத்தை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தைக் கண்டனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
    அவர் திருப்திகரமான பதில் ஏதும் அளிக்கவில்லை. மேலும்,  சிஆர்பிஎஃப் படையில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை ஏதும் அவரிடம் இல்லை. 
    இதுகுறித்து விசாரித்தபோது தான் ஜம்மு காஷ்மீரில், ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎஃப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருவதாக அவர்  கூறினார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎப் அலுவலகத்திலும், ஷாம்லியியில் உள்ள காவல் நிலையத்திலும் அவர் குறித்து விசாரிக்கப்பட்டது. 
    அப்போது, சிஆர்பிஎஃப் வீரர் என்று அவர்  கூறியது பொய் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் சோதனையிடப்பட்டார். அப்போது, இரு வேறு பிறந்த தேதிகள், தந்தை பெயர் மற்றும் முகவரிகள் இடம் பெற்ற இரு ஆதார் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. 
    மேலும், அவர் உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த நதீம் கான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக தில்லி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp