Enable Javscript for better performance
ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான  48 ஜேஎன்யு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான  48 ஜேஎன்யு ஆசிரியர்களுக்கு மாணவர்கள் ஆதரவு

    By DIN  |   Published on : 05th August 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2018-இல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேன்யு) ஆசிரியர்கள் 48 பேருக்கு ஆதரவாக பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    இது தொடர்பாக அவர்கள் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். பேராசிரியர்கள் அபூர்வானந்த், மனோஜ் ஜா, சமூக ஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் மற்றும் பலர் சேர்ந்து அந்த அறிக்கையை வெளியிட்டுளளனர். 
    அதில், சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல்வேறு நாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆசிரியர்களின் நியாயமான உரிமையைத் தடுத்து நிறுத்துவதாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு ஜேஎன்யு பல்கலை ஆசிரியர்கள் 48 பேர் வேலை ஒருநாள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மத்திய சிவில் சர்வீஸ் (நடத்தை) விதிகளுக்கு (சிசிஎஸ் விதிகள்) எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. 
    மேலும், அவர்கள் கற்பித்தல் மற்றும் கற்றல் கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதாகவும் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai