3 மாதங்களில் காகிதப் பயன்பாடில்லாத சட்டப்பேரவை!

மூன்று மாதத்துக்குள் தில்லி சட்டப்பேரவையில் காகிதப் பயன்பாடு இல்லாமல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதத்துக்குள் தில்லி சட்டப்பேரவையில் காகிதப் பயன்பாடு இல்லாமல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தில்லி சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் இருக்கைகளில் எல்சிடி கம்யூட்டர் ஸ்கிரீன் அமைக்கப்படவுள்ளது. இந்த ஸ்கிரீனின் உதவியுடன் சட்டப்பேரவை கேள்விகள் தொடர்பாக எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் மடிக் கணினி வழங்கப்படவுள்ளது. சட்டப்பேரவை அலுவல்கள் தொடர்பாக எம்எல்ஏக்களுக்கு முன் கூட்டியே கணினி மூலம் விளக்கிக் கூறப்படவுள்ளது.
 இன்னும் 3 மாதங்களுக்குள் சட்டப்பேரவையில் காகிதப் பயன்பாடு முற்றிலும் நீக்கப்படும். இதற்காக தில்லி அரசு ரூ.20 கோடியை ஒதுக்கியுள்ளது. தில்லி சட்டப்பேரவை தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த முன்மொழிவு தில்லி அரசின் நிதித் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.  
இது தொடர்பாக தில்லி சட்டப்பேரவை அதிகாரிகள் கூறுகையில் "இத்திட்டத்துக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை தேசிய தகவல் மையம் வழங்குகிறது. பேரவைத் தலைவரின் கனவுத் திட்டமான இது மிக விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது' என்றனர். தில்லி சட்டப்பேரவை அலுவல்கள் காகிதப் பயன்பாடில்லாமல் முழுக்க முழுக்க கணினி பயன்பாட்டுடன் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பேரவைத் தலைவர்அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com