தில்லி காவலரைத் தாக்கியதாக சிறார் உள்பட இருவர் கைது

தென்கிழக்கு தில்லி, மதன்பூரில் உள்ள ஜேஜே காலனி பி-பிளாக்கில் சோதனை நடத்தச் சென்ற தில்லி காவலர்

தென்கிழக்கு தில்லி, மதன்பூரில் உள்ள ஜேஜே காலனி பி-பிளாக்கில் சோதனை நடத்தச் சென்ற தில்லி காவலர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிறார் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மதன்பூரில் உள்ள ஜேஜே காலனி, பி-பிளாக்கில் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக சோதனை நடத்துவதற்கு தில்லி காவல் துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் சனிக்கிழமை சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவரைத் தாக்கியதுடன், அவர் வந்த மோட்டார்சைக்கிளையும் சேதப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அந்தக் காவலர் தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். மக்கள் கலைந்து சென்றதும் அவர் அங்கிருந்து தப்பினார். ஆனால், அவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டார். இது குறித்து உயரதிகாரிகளிடம் அவர் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, தாக்குதலுக்கு உள்ளான அந்தக் காவலரின் மோட்டார்சைக்கிள் சேதமடைந்த நிலையில் அங்கு இருப்பதைக் கண்டனர். இது தொடர்பாக அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறார் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com