தில்லியில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

தில்லி சங்கம் விஹார் பகுதியில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை போலீஸார் மீட்டனர். சிறுவனை கடத்திச் சென்றவர் திகிரி கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.

தில்லி சங்கம் விஹார் பகுதியில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை போலீஸார் மீட்டனர். சிறுவனை கடத்திச் சென்றவர் திகிரி கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தனது 4 வயது மகன், வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடச் சென்றதாகவும், ஆனால், திடீரென காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வுக்குள்படுத்தினர். அப்போது, அந்தச் சிறுவனை ஒருவர் தூக்கிச் செல்வது பதிவாகியிருந்தது. அவர் அச்சிறுவனுடன் தேவ்லி கிராமத்துக்குச் செல்வது போலவும் அதில் பதிவாகியிருந்தது. 
 இதையடுத்து, போலீஸ் படையினர் அந்தக் கிராமத்துக்குச் சென்று, சிறுவனின் புகைப்படத்தை பொதுமக்களிடம் காட்டினர். 
மேலும், சந்தேகத்துக்குரிய அந்த நபர் குறித்த அடையாளங்களையும் தெரிவித்தனர். அப்போது, தீப் சந்த் என்பவர் போலீஸாரிடம் தனது மாமா கிஷோர்தான் அந்த நபர் என்று தெரிவித்தார். 
மேலும், அந்தக் குழந்தையை வெள்ளிக்கிழமை வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும், குழந்தையை தான் தத்து எடுத்துள்ளதாகவும் தனது மாமா கிஷோர் கூறியதாக தீப் சந்த் தெரிவித்தார்.
அப்போது, அந்தக் குழந்தையை ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தனது மாமாவிடம் கூறியதாகவும் தீப் சந்த் தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்து, கிஷோர் அந்தக் குழந்தையை திகிரியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர் போலீஸ் படையினர் அங்கு சென்று சிறுவனை மீட்டனர். இது தொடர்பாக கிஷோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com