மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார். 

தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார். 
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: 
தெற்கு தில்லி, சங்கம் விஹாரைச் சேர்ந்த 58 வயதுடைய அந்த நபர், தனது 56 வயதுடைய மனைவியுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு மூன்று மகன்கள். இருவருக்கு திருமணமாகிவிட்டன. ஒருவருக்கு 23 வயது ஆகிறது. இந்நிலையில், சனிக்கிழமை கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியை அந்த நபர் கத்தியால் குத்தினார். அப்போது, அவரது மகன் அந்த நபரை வீட்டின் அறையில் வைத்து வெளிப்பக்கத்தில் தாழ்பாள் போட்டுவிட்டார். 
இச்சம்பவத்தில் காயமடைந்த தனது தாயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். போகும் வழியில் இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண், தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், அவரது வீட்டுக்குச் சென்று, அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞருடன் தனது மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக அந்த நபர் சந்தேகமடைந்ததாக விசாரணையின் போது தெரிவித்தார். இது தொடர்பாக தனது மனைவியிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் வேலையில்லாமல் இருந்து வந்ததாகவும், மதுவுக்கு அடிமையானவர் என்றும் அக்கம்பக்கத்தில் நடத்தப்பட்ட விசைரணையில் தெரிய வந்தது. இதனால், தனது மனைவியுடன் அற்ப விஷயங்களுக்கெல்லாம் அந்த நபர்அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையும் இதுபோன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரது மகன் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமையும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவியை அவர் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com