தில்லியில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொண்டாட்டம்

காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டு தலைநகர் தில்லியில் தஞ்சம் புகுந்துள்ள

காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டு தலைநகர் தில்லியில் தஞ்சம் புகுந்துள்ள காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 
காஷ்மீரின் பூர்வ குடிகளாக காஷ்மீர் பண்டிட்டுகள் 1990-இல் காஷ்மீரில் நடைபெற்ற சில சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்த வெளியேறினர். இவர்கள் தலைநகர் தில்லியில் பெருமளவில் வசித்து வருகின்றனர். 
இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மத்திய அரசின் முடிவை இவர்கள் வரவேற்றுள்ளனர். தில்லியின் பல பகுதிகளில் கூடிய இவர்கள் மத்திய அரசின் முடிவை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் விஜார் மஞ்ச் தலைவர் மனோஜ் பான் கூறியதாவது: 1990, ஐனவரி 19-இல் காஷ்மீரில் உள்ள அனைத்து இஸ்லாமிய பள்ளிவாசல்களும், காஷ்மீர் பண்டிட்டுகள் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கபீர்கள் என அறிவித்தது. மேலும், இஸ்லாமியர்களாக மதம் மாற விரும்பாத காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவார்கள் எனவும் காஷ்மீர் பிரிவினைவாதிகளால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் பூர்வீக மண்ணை விட்டு வெளியேறி தில்லி, ஜம்முவில் குடியேறினர். இவர்களுக்காக தில்லி, ஜம்மு போன்ற இடங்களில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு சுமார் 3 லட்சம் காஷ்மீர் பண்டிட்டுகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
 காஷ்மீரில் நிலவிய அரசியல் குழப்ப நிலைகளால் எங்களால் காஷ்மீருக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை நீடித்தது. இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 
இதனால், இனிமேல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே காஷ்மீரிலும் பின்பற்ற வழியேற்பட்டுள்ளது. இதனால், காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். நாங்கள் காஷ்மீர் திரும்பும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். 
மேலும், காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக காஷ்மீரில் தனியாக குடியிருப்புகள் அமைக்கப்பட வேண்டும். அங்கே, காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குடியேற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதி, காஷ்மீர் வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். இந்த நாள் எதேட்சதிகாரம், ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து காஷ்மீர் விடுதலை பெற்ற நாளாக நினைவுகூரப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com