சுடச்சுட

  

  தென்கிழக்கு தில்லியில் சரிதா விஹார் பகுதியில் கடந்த பிப்ரவரியில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரி கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
  இது குறித்து காவல் துறை துணை ஆணையர் (குற்றப் பிரிவு) ராம் கோபால் நாயக் புதன்கிழமை கூறியதாவது: 
  கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி சரிதா விஹாரில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் கலிந்தி குஞ்ச் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் யார் என்று அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
   இந்நிலையில், இக்கொலை வழக்கில் தினேஷ், செளரவ், ரஹிமுதீன், சந்தரேஸ்வர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்தச் சம்பவத்தில் திரேந்தர் சிங் (40) மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. சராய் காலே கான் பேருந்து முனையத்தில் திரேந்தர் சிங் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் ஒரு கொலை வழக்கில் ரோஹிணி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது சக கைதியான புந்தி என்பவருடன் பகை ஏற்பட்டுள்ளது. திரேந்தர் சிங் அடைக்கப்பட்ட சிறைச்சாலையில்தான் தினேஷும் இருந்துள்ளார். கடந்த 2018-இல் சிறையிலிருந்து வெளியே வந்த திரேந்தர் சிங், புந்தியின் சகோதரரைத் தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
   தினேஷுக்கு அறிமுகமான அந்தப் பெண்ணை வேலை வாங்கித் தருவதாக செல்லிடப்பேசியில் அழைத்துள்ளனர். அந்தப் பெண்ணை தினேஷ்தான் அவரது குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளார். தனக்கு எதிர்காலத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் புந்தியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும்தான் பொறுப்பு என்று அக்கடிதத்தில் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக எழுத செய்துள்ளனர். பின்னர், திரேந்தர் சிங் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்றார் அந்த அதிகாரி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai