சுடச்சுட

  

  முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை இந்தியாவுக்கான நேபாள நாட்டின் தூதர் நிலம்பர் ஆச்சார்யா, தில்லி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். 
  இது தொடர்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது: கேஜரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோரைச் சந்தித்த நிலம்பர் ஆச்சார்யா, சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தில்லியைச் சிறப்பாக ஆட்சி செய்யும் தில்லி அரசுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தில்லியில் பெருமளவு நேபாள மக்கள் வசிப்பதால், நேபாள மக்கள் தில்லியுடன் உணர்வு ரீதியாகப் பிணைந்துள்ளனர் என நிலம்பர் ஆச்சார்யா கேஜரிவாலிடம் தெரிவித்தார். 
  மேலும், தில்லி அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மகிழ்ச்சி வகுப்புகளை நேபாளப் பள்ளிகளில் கற்பிப்பது தொடர்பாகவும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை மக்களுக்கு சரிவர வழங்கி வரும் தில்லி அரசுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். 
  தில்லி அரசுப் பள்ளிகளையும், மொஹல்லா கிளினிக்குகளையும் பார்வையிட வருமாறு நிலம்பர் ஆச்சார்யாவுக்கு, மணீஷ் சிசோடியா அழைப்பு விடுத்தார் என்றனர்அவர்கள்.  
  இது தொடர்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், "இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையை நீண்டகால நட்பு உள்ளது. நிலம்பர் ஆச்சாரியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடன் பல விஷயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம்' என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai