சுடச்சுட

    

    மூத்த குடிமக்கள், மாணவர்களுக்கு பேருந்து, மெட்ரோ ரயில் "பாஸ்'

    By DIN  |   Published on : 15th August 2019 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைக் கட்டணத்தில் "பாஸ்' வழங்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா வலியுறுத்தினார்.
    இது தொடர்பாக தில்லியில் புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2015 பேரவைத் தேர்தல் அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சி மூத்த குடிமக்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களிலும் சிறப்பு சலுகைக் கட்டணப் பாஸ் வழங்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த வாக்குறுதியை தில்லி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே, இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai